உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு
ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்க நிகழ்ச்சியாக, சாம்பல் புதன் சிறப்பு வழிகாடுகள் நடைபெற்றன.
இயேசு பிரான், தான் சிலுவையேற்கும் காலம் நெருங்குவதை முன்கூட்டியே அறிந்து, உலக மக்களின் பாவங்களை போக்குவதற்காக விரதமிருந்து, தவம் இயற்றினார் என்பது விவிலியத்தின்கூற்று,
அதன்படி ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் கிறிஸ்தவர்களின் தவக்கால மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கொடை அளித்தல், அசைவம் தவிர்த்தல் போன்றவற்றை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பது வழக்கம்.
கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமாக கடைப்பிடிக்கப்படும் சாம்பல் புதன், ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் முதல் நிகழ்வாக ஆர்கே அடிகளார் தலைமையில் , கித்தரி முத்து அடிகளார் முன்னிலையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
இதில் கும்மங்குளம் பாத்திமாநகர் வாழைக்கொல்லை, வண்ணாச்சிகொல்லை, ஆலங்குடி சம்பட்டிவிடுதி நால்ரோடு அயங்காடு ஆகிய பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.