உள்ளூர் செய்திகள்
கந்தர்வக்கோட்டையில் பாரம்பரிய உணவு போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்ட பாரம்பரிய உணவு போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை ஒன்றிய ஆணையர் காமராஜ் தலைமை தாங்கினார். போட்டியில் உடலுக்கு வலுவூட்டும் சிறுதானிய உணவுகள், அனைவருக்கும் ஏற்ற ஊட்டச்சத்து உள்ள பாரம்பரிய உணவுகள் மற்றும் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ற தலைப்பில் பாரம்பரிய உணவு போட்டி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மகளிர் திட்ட மேலாளர் சந்திரசேகரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் முரளி, தேவராஜன், தேவி, சத்யா, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.