உள்ளூர் செய்திகள்
கத்திக்குத்து

கணவரால் உயிருக்கு ஆபத்து- கத்திக்குத்து காயத்துடன் போலீஸ் நிலையத்துக்கு வந்த இளம்பெண்

Published On 2022-03-03 12:44 IST   |   Update On 2022-03-03 12:44:00 IST
காஞ்சிபுரம் அருகே கத்திக்குத்து காயத்துடன் போலீஸ் நிலையத்துக்கு வந்த இளம்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த சின்னாளம்பாடியை சேர்தவர் ரவி. முன்னாள் ஊராட்சி தலைவர்.

இவரது 2-வது மனைவி அருணா. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் அருணா கத்திக்குத்து காயத்துடன் காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நான் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். மீண்டும் என்னை குடும்பம் நடத்த கணவர் ரவி அழைத்தார்.

இதையடுத்து நான் அங்கு சென்றபோது கணவர் ரவி மற்றும் அவருடன் இருந்த மர்ம நபர்கள் கத்தியால் என்னை வெட்டினர். அதனை தடுக்க முயன்ற எனது தாய், தம்பிக்கும் காயம் ஏற்பட்டது.

கணவரால் எனது குழந்தைக்கும், எனக்கும் ஆபத்து உள்ளது பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கத்திக்குத்து காயத்துடன் வந்த அருணாவை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News