உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தேர்திருவிழானை முன்னிட்டு 7-ந்தேதி உள்ளூர் விடுமுறை

Published On 2022-03-02 16:11 IST   |   Update On 2022-03-02 16:11:00 IST
திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா வருகிற 7-ந்தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: 

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா வருகிற 7-ந்தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், 

கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 26.03.2022 சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும், வழக்கமாக சனிக் கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங் களுக்கு 27.3.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கிறேன்.    

இந்த உள்ளூர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும்

அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கிறேன். மேலும், அரசு பொதுத் தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும், இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News