உள்ளூர் செய்திகள்
திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி தபால் ஊழியர் பலி
திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்தி சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை சுப்பிரமணியன் நகரைச் சேர்ந்தவர் பழனி முத்து (வயது 62). இவர் ஓய்வுபெற்ற தபால் ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி சாலையில் சந்தைப்பேட்டை டேனிஷ் மிஷன் மருத்துவமனை அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பழனிமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிமுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்தி சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.