உள்ளூர் செய்திகள்
ஐயாறப்பர் சுவாமி-அம்பாள் வீதிஉலா புறப்பாடு.

ஐயாறப்பர் கோவிலில் மகாசிவராத்திரி விழா

Published On 2022-03-02 09:29 GMT   |   Update On 2022-03-02 09:29 GMT
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது.
திருவையாறு:

திருவையாறு ஐயாறப்பர் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழூர்த் தலங்களிலுள்ள சிவன் கோவில்களில் நேற்றிரவு முழுவதும் மகா சிவராத்திரி விழா நடந்தது.


கோயில் வளாகத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி முதலிய இசை நிகழ்ச்சிகள் நடந்தது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஐயாறப்பர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்தன. 

ஐயாறப்பர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நீளமான மூன்று நடைமேடைகளிலும் வரிசையாக 108 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு அழகுற ஒளிர்ந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப் பட்டது. சிறப்பு வழிபாடாக இரவு 9.30 மணி, 11 மணி, 
2 மணி மற்றும் 4.30 மணி ஆகிய 4 கால பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து கயிலை வாத்தியங்கள் முழங்க சுவாமி வீதிஉலா நடந்தது.

திருவையாறை சுற்றி சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள திருப்பழனம் ஆபத்சகாயர் கோவில், திருச்சோற்றுத்துறை ஓதனவனேஷ்வரர் கோவில், திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோவில், கண்டியூர் பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவில், திருப்பூந்துருத்தி புஷ்பவனேஷ்வரர் கோவில் மற்றும் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோவில் ஆகிய ஐயாறப்பர் சுவாமி களோடு தொடர்புடைய ஏழூர்த்தல சிவன் கோவில் களுக்கும் பக்தர்கள் சென்று வழிபட்டனர்.
Tags:    

Similar News