உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி

Published On 2022-03-01 16:13 IST   |   Update On 2022-03-01 16:13:00 IST
விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி நடைபெற்றது
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும், மாநில விரிவாக்கத் திட்டங்களின்  உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2021&2022 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட சூழலில் காய்கறி சாகுபடி மாநிலத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி, ரெட்டியார் சத்திரம் காய்கறி மகத்துவ மையத்திற்கு மூன்று நாள் பயிற்சிக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

இப்பயிற்சியினை வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் பெரியசாமி துவக்கி வைத்தார். இதில் ரெட்டியார் சத்திர காய்கறி மகத்துவ மைய உதவி தோட்டக்கலை அலுவலர்,  கோபால்பட்டியில் இயங்கி வரும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் உதவி வேளாண்மை அலுவலர்,  உதவி விதை அலுவலர் சொ.கிருஷ்ணமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர் ஆ.அருண்குமார் ஆகியோர் காய்கறி சாகுபடி பற்றி விளக்கமாக எடுத்து கூறினர்.

Similar News