உள்ளூர் செய்திகள்
பக்தர் ஒருவர் பால்குடம் எடுத்து வந்த காட்சி.

கோவிலூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-03-01 15:55 IST   |   Update On 2022-03-01 15:55:00 IST
கோவிலூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்து மாரியம்மன்கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் முன் உள்ள கீழ ரதவீதியில் மின்விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர் நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியை சிவாச்சாரியார்களும், ஊர் முக்கியஸ்தர்களும் சேர்ந்து தோளில் தூக்கி வந்து தேரில் வைத்தனர். அதனைத்தொடர்ந்து உற்சவருக்கு மாலைகள் அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது செங்கவளநாட்டு கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் தேர்வடத்தை பிடித்து இழுத்தனர்.

தெற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதி வழியாக சென்றபோது ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேல ரத வீதி வழியாக வான வேடிக்கைகளுடன் தேர் இழுத்து வரப்பட்டது

தேரோட்டம் காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Similar News