உள்ளூர் செய்திகள்
தொலைபேசி

உக்ரைனில் சிக்கி தவிக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீட்க தொலைபேசி எண் வெளியீடு- கலெக்டர் தகவல்

Published On 2022-03-01 08:58 IST   |   Update On 2022-03-01 08:58:00 IST
உக்ரைன் நாட்டில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை தமிழகம் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 24-ந் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைன் மீது போர்த்தொடுத்து வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் உக்ரைன் நாட்டில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை தமிழகம் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்களைத் திறந்துள்ளது. அதன்படி உக்ரைனில் சிக்கியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் விவரங்களை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை 9445008138 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Similar News