உள்ளூர் செய்திகள்
கைது

திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2022-02-28 16:46 IST   |   Update On 2022-02-28 16:46:00 IST
திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஆசனூரை சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர், திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, முருகனை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 350 ரூபாய் மதிப்புள்ள 69 லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முருகனிடம், போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் திருவண்ணாமலை அண்ணா நகரில் வசிக்கும் முத்து என்பவர் மூலம் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Similar News