உள்ளூர் செய்திகள்
குழந்தைகளுக்காக கரும்பில் தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய போது எடுத்த படம்.

முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

Published On 2022-02-28 13:43 IST   |   Update On 2022-02-28 13:43:00 IST
கோவிலூர் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவிவை முன்னி ட்டு பொங்கல் விழா நடை பெற்றது. 

கடந்த 20ம் தேதி முத்துமாரியம்மனுக்கு  பூச்சொரிதல் விழாவும், அதனை தொடர்ந்து தினந்தோறும் மண்டகப் படிகளில் கலைநிகழ்ச்சிகளும் நடை பெற்றது. 

9ம் நாளானநேற்று பொங்கல் விழா நடைபெற்றது. காலையில் கோவில் வாசலில் பொங்கல் வைக்கப் பட்டு விழா கொண்டாடப்பட்டது. 

பக்தர்கள் பால்குடம் எடுத்தும், குழந்தைகளை கரும்பு தொட்டிலில் கட்டியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News