உள்ளூர் செய்திகள்
திறனறி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

கந்தர்வக்கோட்டையில் மாணவர்களுக்கான திறனறித்தேர்வு

Published On 2022-02-28 13:37 IST   |   Update On 2022-02-28 13:37:00 IST
கந்தர்வக்கோட்டையில் மாணவர்களுக்கான திறனறித்தேர்வு நடை பெற்றது.
புதுக்கோட்டை:

தமிழ்நாடு முழுவதும் அறிவியல்  இயக்கம்  சார்பில் துளிர் திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வகோட்டை வட்டார வளமையம், அக்கட்சிபட்டி, காட்டு நாவல், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் வெள்ளாளவிடுதி உயர்நிலை பள்ளிகளில் துளிர் திறனறித்தேர்வு நடை பெற்றது.

இந்த தேர்வில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். புதுக்கோட்டை அறிவியல் இயக்க மாவட்ட செயலா ளர் முத்துகுமார், கந்தர்வகோட்டை வட்டாரதலைவர் ரகமதுல்லா, செயலாளர் சின்னராஜா, தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.  

தேர்வு  குறித்து  மாணவர்கள் கூறியபோது,  சிந்திக்கும் வகை வினாக்கள் அதிகம் இடம் பெற்றுள்ளது  என்றும், பொது அறிவு,  கணிதம், அறிவியல் தொழில் நுட்ப கேள்வி எளிமையாக இருந்த தாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்வு எழுதுவதால் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

Similar News