உள்ளூர் செய்திகள்
பாஜக

பா.ஜனதா மாநில நிர்வாகிகள்- மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

Published On 2022-02-28 11:59 IST   |   Update On 2022-02-28 11:59:00 IST
தேர்தலை பாடமாக கொண்டு அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் ஆகும்படி மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

சென்னை:

சென்னையில் இன்று தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கருப்புமுருகானந்தம், வி.பி. துரைசாமி, கரு.நாகராஜன், செல்வகுமார், சக்கரவர்த்தி, நரேந்திரன், எம்.என்.ராஜா, எஸ்.ஆர்.சேகர்.

மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன், தனசேகர், சென்னை சிவா, விஜய்ஆனந்த், கிருஷ்ண குமார், தட்சிணா மூர்த்தி உள்பட அனைத்து மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள் ஆசிம்பாஷா, மீனாட்சி, சதீஷ், வினோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட வாரியாக உள்ளாட்சி தேர்தல் முடிவு பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த தேர்தலை பாடமாக கொண்டு அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் ஆகும்படி மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

Similar News