உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் நகராட்சி கூட்டரங்கில் புதிய வர்ணம் பூசப்படுகிறது.

2-ந் தேதி உறுப்பினர்கள் பதவி ஏற்பு: திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் சீரமைப்பு

Published On 2022-02-28 11:43 IST   |   Update On 2022-02-28 11:43:00 IST
திருவள்ளூர் நகர மன்ற கூட்டரங்கத்தை சீரமைத்து தயார் செய்யும் பணி வேகமாக நடக்கிறது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,-14, அ.தி.மு.க.-3, காங்கிரஸ்-1, சுயேட்சைகள்-8 பேர் வெற்றி பெற்று உள்ளனர். தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற 27 கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி வருகின்ற 2-ந் தேதி காலை நகரசபை கூடத்தில் நடைபெற உள்ளது. வார்டு வாரியாக கவுன்சிலர்கள் அழைக்கப்பட்டு பதவியேற்க உள்ளனர்.

3-ந் தேதி நகர மன்றத் தலைவர், நகர மன்ற துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. 4-ந் தேதி காலையில் மேயர் தேர்தலும், மதியம் துணை மேயர் தேர்தலும் நடைபெற இருக்கிறது.

திருவள்ளூர் நகராட்சியை பொறுத்த வரை தி.மு.க. தனிப்பெரும்பான்மையோடு உள்ளதால் கட்சி தலைமை அறிவிக்கும் நபர் நகர மன்ற தலைவர், நகர மன்ற துணைத் தலைவராக வாய்ப்பு உள்ளது. இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகர மன்ற கூட்டரங்கத்தை சீரமைத்து தயார் செய்யும் பணி வேகமாக நடக்கிறது.

கவுன்சிலர்கள் பதவியேற்பு மற்றும் நகர மன்ற முதல் கூட்டத்தையொட்டி நகரமன்ற கூட்டரங்கத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல நகர மன்ற தலைவர் அறை, கவுன்சிலர்கள் அறைகளுக்கு புதிய வர்ணம் பூசப்படுகிறது.

Similar News