உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் உக்ரைனில் தவிப்பு

Published On 2022-02-27 09:27 GMT   |   Update On 2022-02-27 09:27 GMT
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் உக்ரைனில் தவித்து வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் காட்பாடி பிரமபுரத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகள் பவ்ய ஸ்ரீ உக்ரைன் நாட்டில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். 

தற்போது அங்கு போர் நிலவி வருவதால் அவரை மீட்டு தரும்படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

இதேபோல பேரணாம்பட்டை சேர்ந்த சையத் அக்யார் அகமது (20) என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அங்கு படித்து வருகிறார்.

இதேபோல வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 மாணவிகள் உள்பட மொத்தம் 5 பேர் இதுவரை உக்ரைன் நாட்டில் தவிப்பது தெரியவந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு மூலம் அவர்கள் குறித்த தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் இருக்கும் பகுதியில் அடிக்கடி குண்டுகள் வீசப்படும் சத்தம் கேட்கிறது. இதனால் அச்சத்துடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து அவர்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

விரைவில் அவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News