உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

திருவட்டார் அருகே கூலி தொழிலாளி மீது தாக்குதல் : 4 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2022-02-26 13:19 IST   |   Update On 2022-02-26 13:19:00 IST
திருவட்டார் அருகே கூலி தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே பள்ளிவிளை, பூவன்கோடு பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ் (வயது 67), கூலி தொழிலாளி.  இவரது  வீட்டின் பின்பக்கம் வசித்து வருபவர்கள் ஜெஸ்டின் ராஜ், ஜெஸ்டின்ஆலிவர், ஜெஸ்டின் ஜெயராஜ், ஜெஸ்டின் ஜெயகுமார். 

இவர்கள் 4 பேரும்  அண்ணன் தம்பிகள் ஆவர்கள்.  இவர்களுக்கும் பால் ராஜுக்கும் இடையே முன் விரோதம் இருந்துவந்தது. சம்பவத்துன்று 4 பேரும் சேர்ந்து பால்ராஜ் வீட்டுக்குள் புகுந்து  சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பால்ராஜ் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News