உள்ளூர் செய்திகள்
வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பருத்தி விதைப்பு பயிற்சி
ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் பருத்தி விதைகளை விதைக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் தங்களது வேளாண் ஊரக பட்டறிவு முகாமின் ஒரு பகுதியாக பருத்தி விதைகளை விதைக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
புத்தகரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் அவர்களின் வயலில் மாணவிகள் பருத்தி விதைப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.
பருத்தியின் ரகம், இடைவெளி மற்றும் விதைக்கும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு விவசாயி விளக்கினர்.
இப்பயிற்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, ஐஸ்வர்யா, அனுசுயா, பபிதா, பாரதி, பவதாரணி, திவ்யா, ஹரிணி, இந்துமதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பங்கேற்றனர்.