உள்ளூர் செய்திகள்
நாய் கடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம்
ஆலங்குடி சேந்தன்குடி அரசு பள்ளி வளாகத்தில் 3 மாணவர்களை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்தனர்.
ஆலங்குடி சேந்தன்குடி அரசு பள்ளி வளாகத்தில் 3 மாணவர்களை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ &மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வளாகத்திற்குள் புகுந்த நாய் 6ம் வகுப்பு சபரி வயது11, 7ம் வகுப்பு சிவராகுல் 12, 8வகுப்பு புனிதன் 13 ஆகிய 3 மாணவர்களை கடித்துள்ளது.இதனால் மாணவர்கள் அலறினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்குவந்த ஆசிரியர்கள் அந்த நாயை விரட்டி விட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீரமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிகிச்சை அளித்து மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் சேந்தன்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் வந்துநடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு இனி மேல் இது போல் அசம்பா விதங்களை தடுக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
சேந்தன்குடி அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அதிக அளவிலான நாய்கள் சுற்றித்திரிவதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.