உள்ளூர் செய்திகள்
ஆத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
ஆத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டடனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பெண்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகனிடம் கோரிக்கை மனு ஒன்றை மனு கொடுத்தனர்.
மனுவில், தங்கள் பகுதியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிக்கு வருபவர்களை காலை 7 மணிக்கே வரச்சொல்லி ஊராட்சி செயலாளர் தொந்தரவு செய்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் கூறியதையடுத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.