உள்ளூர் செய்திகள்
முசிறி டி.எஸ்.பி. அருள்மணி சிசிடிவி கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.

துறையூர் பஸ் நிலையம் சிசிடிவி காமிரா மூலம் கண்காணிப்பு

Published On 2022-02-24 06:29 GMT   |   Update On 2022-02-24 06:29 GMT
குற்ற நடவடிக்கைகளை தடுக்க துறையூர் பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.
திருச்சி:

துறையூர் பேருந்து நிலையத்தில் சந்தேக நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை விரைவாக பிடிக்கவும் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது.

அவைகளில் ஒரு சில கேமராக்கள் பழுதடைந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் 15 சிசிடிவி கேமராக்கள் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டது.  

இதன் செயல்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தை நேற்று முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துறையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News