உள்ளூர் செய்திகள்
.

வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வயல் விழா

Published On 2022-02-24 06:27 GMT   |   Update On 2022-02-24 06:27 GMT
சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நவப்பட்டி கிராமத்தில் வயல் விழா நடந்தது.

பனமரத்துப்பட்டி:

சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தால் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பருத்தி கோ 17 ரகம் குறித்து கொளத்தூர் வட்டாரம் நவப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வயலில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து பயிர் அறுவடை தினத்தன்று வயல்விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தலைமை தாங்கினார். மண்ணியல் துறை தொழில்நுட்ப வல்லுனர் மலர்க்கொடி,

பருத்தி கோ17 ரகத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்தார். அவர் கூறும் போது, ‘இந்த பருத்தி கோ 17 ரகமானது 125 முதல் 135 நாட்களில் வளர்ச்சி அடையும். அதிக செடி கிளைகள் இல்லாதது. நேரான செடி, 2 அறுவடையில் பருத்தி எடுப்புக்கு ஏற்றது. ஏக்கருக்கு 1 டன் மகசூல் கொடுக்கும். அடர் நடவுக்கு ஏற்றது. தமிழகத்தில் நெல் தரிசு,

குளிர்கால மானாவாரி மற்றும் கோடைகால நீர்ப்பாசன பயிர்களுக்கு ஏற்றது. மத்திய நீண்ட இழை பருத்தி ரகமாகும்’ என்றாா். மேலும் பயிர் பாதுகாப்புத்துறை விஞ்ஞானி ரவி, பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்தும், சுற்றுச்சூழல் அறிவியல் விஞ்ஞானி கிருஷ்ணவேணி, பருத்தி பயிர் கழிவு மேலாண்மை குறித்தும் விளக்கி பேசினார்கள்.
Tags:    

Similar News