உள்ளூர் செய்திகள்
மெயின் பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

வேலூரில் மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

Published On 2022-02-23 09:20 GMT   |   Update On 2022-02-23 09:20 GMT
வேலூர் மெயின் பஜார் அருகே மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்

வேலூர் மெயின் பஜார் அருகே உள்ள சர்க்கார் மண்டித் தெருவில் மசூதி கட்ட ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு அந்த பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்று காலை மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து மெயின் பஜாரில் உள்ள நகை, அடகு கடைகள், டீ கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

மேலும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி நிர்வாகிகள் திரண்டனர்.

இதேபோல மசூதி கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களும் ஒன்று திரண்டனர். ஏராளமானோர் அங்கு குவிந்ததால் பதட்டம் ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அந்த இடத்தில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.இரு தரப்பினரும் எதிர்ப்பு மற்றும் ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.

வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரும் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கோஷங்களை எழுப்பினர் இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவியது.
Tags:    

Similar News