உள்ளூர் செய்திகள்
கடைவீதியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள்.

பிளாஸ்டிக் குப்பைகளால் பொது மக்கள் அவதி

Published On 2022-02-23 09:14 GMT   |   Update On 2022-02-23 09:14 GMT
கடைவீதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கந்தர்வகோட்டை கடைவீதி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள்  மற்றும்  பிளாஸ்டிக்கழிவுகள் மலை போல் குவிந்துள்ளதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதியடைகின்றனர்.

கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் கந்தர்வகோட்டை கடை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள்  மலை போல் குவிகிறது. இதனால் வாகனங்களில் பயணம் செய்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

மேலும் தூய்மை காவலர்கள் குப்பை வண்டியில் சேகரித்து வேறுஇடத்தில் பிளாஸ்டிக் பைகளை கொட்டினாலும், காற்றின் வேகத்தில் குப்பைகள் மீண்டும்  சாலைகளில் பறக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. மேலும், கழிவுநீர்கால் வாய்களில்  தற்காலிக அடைப்புகளை  ஏற்படுத்துகிறது.

இதனால் சுகாதாரக்கேடும், நோய்த்தொற்றும் அபாயம் ஏற்படுகிறது. அரசால் தடை செய்யப் பட்ட பாலிதீன் பைகளால் ஏற்படும் தீமைகளை  எடுத்துக் கூறி மீண்டும் துணி பை மற்றும் சணல் பைகளை பயன் படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News