உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கந்தர்வகோட்டையில் சாலை மறியல் போராட்டம்

Published On 2022-02-23 14:34 IST   |   Update On 2022-02-23 14:34:00 IST
கந்தர்வகோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

திருவாரூர் மாவட்டம் கோவிலூர் பகுதியில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சார்பில், சமீபத்தில் இறந்து ஒரு நிர்வாகியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தலைவர் கே.கே செல்வகுமார் தலைமையில்   இன்று ஊர்வலமாக சென்று  அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர்.

அதனை அறிந்த, திருச்சி மாநகர போலீசார், திருவாரூர் மாவட்டத்திற்கு கே.கே செல்வகுமார் செல்லக்கூடாது என்பதற்காக இன்று காலை ராம்ஜி நகர் கொத்தமங்கலம் பகுதியில் உள்ள அவரது  வீட்டிற்கு சென்ற அவரை வெளியே செல்ல விடாமல் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

இதனை கண்டிக்கும் விதமாக கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே வீரமுத்தரையர் சங்கம் சார்பில் அதன் பொறுப்பாளர் வீரமணி தலைமையில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Similar News