உள்ளூர் செய்திகள்
.

வேலகவுண்டம்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-02-22 16:05 IST   |   Update On 2022-02-22 16:05:00 IST
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வேலகவுண்டம்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்: 

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (70) கூலித்தொழிலாளி. 

இவருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலன் அளிக்காததால் மனமுடைந்த ரங்கசாமி கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து குடித்து விட்டு உயிருக்கு போராடியுள்ளார். 

இதைபார்த்த அவரது மகன் வரதன் உடனடியாக அவரது தந்தையை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள் ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.  

சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News