உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

களக்காடு நகராட்சி தேர்தல்- 27 வார்டுகளில் 11 இடங்களை சுயேட்சைகள் கைப்பற்றின

Published On 2022-02-22 15:54 IST   |   Update On 2022-02-22 15:54:00 IST
களக்காடு நகராட்சி தேர்தலில் 27 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயேட்சைகள் 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சியான பின் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலை இம்முறை சந்தித்துள்ளது.

மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயேட்சைகள் 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

எனவே சுயேட்சைகள் சிலரின் ஆதரவுடன் இந்த நகராட்சியை தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

Similar News