உள்ளூர் செய்திகள்
.

ஓமலூர் அருகே தடையை மீறி எருதாட்டம் நடத்திய 8 பேர் மீது வழக்கு

Published On 2022-02-22 15:22 IST   |   Update On 2022-02-22 15:22:00 IST
ஓமலூர் அருகே தடையை மீறி எருதாட்டம் நடத்திய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர்:

சேலம்  மாவட்டம் ஓமலூர் அடுத்த  முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப் பட்டியில், மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி, எருதாட்டம் நடத்த ஓமலூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் அனுமதி கேட்டனர்.

ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், திருவிழாவின் போது தடையை மீறி எருதாட்டம் நடத்தினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், தடையை மீறி எருதாட்டம் நடத்தியதாக, முத்துநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ. அறிவழகன் அளித்த புகாரின் பேரில், பாலகுட்டப்பட்டி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த செந்தில், தமிழ்ச் செல்வன், பிரபு, நாகராஜ், அய்யந்துரை, சுதாகர், கருணா கரன், நவீன் உள்ளிட்ட 8 பேர் மீது ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News