உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதை சரி செய்ய 14 என்ஜினீயர்கள் நியமனம்

Published On 2022-02-22 14:50 IST   |   Update On 2022-02-22 14:50:00 IST
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதை சரி செய்ய 14 என்ஜினீயர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதை சரி செய்ய 14 என்ஜினீயர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந் தது. 

இதில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு 14 மையங்களில் வைக்கப்பட்டது.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு வரு கிறது.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் போது ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் ஓட்டு எண்ணிக்கை தடைப்பட வாய்ப்புள்ளது. 

இதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. 

இதையொட்டி ஓட்டு பதிவு எந்திரங்களில் பழுதை சரி செய்வதற்கு ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு என்ஜினீயர் என  14 வாக்குச் சாவடி மையங்களுக்கு 14 என்ஜினீயர்கள் நியமிக் கப்பட்டுளள்னர். 

அவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் உள்ளதா? என்று கண்காணித்து வருகிறார்கள்.

Similar News