உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

Published On 2022-02-22 07:35 GMT   |   Update On 2022-02-22 07:35 GMT
22-ந்தேதி அதிகாலை 3:30 மணிக்கு பக்தர்கள் குண்டம் பூ மிதித்தல், மாலை 3:30 மணிக்கு அம்மன் திருத்தேரில் வீதி உலா வருதல் நடக்கிறது.
பெருமாநல்லூர்:

பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழாவையொட்டி இன்று சகுனம் கேட்டல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 11-ந்தேதி தேர் முகூர்த்தக்கால் நடல், 16-ந் தேதி இரவு கிராமசாந்தி, கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வசந்தம் பொங்கல் வைத்தல், 21-ந் தேதி காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 22-ந்தேதி அதிகாலை 3:30 மணிக்கு பக்தர்கள் குண்டம் பூ மிதித்தல், மாலை 3:30 மணிக்கு அம்மன் திருத்தேரில் வீதி உலா வருதல், 26-ந் தேதி மகா தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் பெரிய மருது பாண்டியன், செயல் அலுவலர் சந்திர மோகன், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News