உள்ளூர் செய்திகள்
கல்லாலங்குடி அருள் விநாயகர் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள்

Published On 2022-02-21 14:06 IST   |   Update On 2022-02-21 14:06:00 IST
ஆலங்குடியில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில்  உள்ள கல்லாலங்குடி  நடேசன் நகரில் உள்ள  அருள்விநாயகர் கோவிலில் 12ம்  ஆண்டு வருடாபிஷேக  விழா  நடை பெற்றது. 

விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கப் பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டது.  யாகசாலையில் 108 சங்காபிஷேகம் நடை பெற்றது. பின்னர் கர்ப்பகிரகத்தில் உள்ள அருள் விநாயகருக்கு சந்தனம், தயிர் மற்றும் பால் போன்ற 16 வகை அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது
 
இதைப்போல் தா.பேட்டையில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் உள்ள ஸ்ரீராஜகணபதிக்கு மாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், தேன், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம்,  உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. 

பின்னர் ராஜகணபதி மலர்களால் அலங்கரிக்கப் பட்டு தீபாரதனைநடை பெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Similar News