உள்ளூர் செய்திகள்
2 நகராட்சி, 4 பேரூராட்சியில் மும்முரமான வாக்குப்பதிவு
நாகை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சியில் மும்முரமான வாக்குப்பதிவு, வரிசையில் நின்று வாக்காளர்கள் கடமை ஆற்றினார்கள்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகை நகராட்சியிலுள்ள 36 வார்டு களில் 1 வார்டு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 35 வார்டு களுக்கு 84 வாக்குச்சாவடி மையங்களிலும், வேதாரண்யம் நகராட்சியிலுள்ள 21 வார்டுகளுக்கு 36 வாக்குச்சாவடி மையங் களிலும, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பேருராட்சிகளில் தலா 15 வார்டுகள் வீதம் 60 வார்டுகளுக்கும் 60 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தமாக 184 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான பொருட்கள் நேற்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் அதனை சரிபார்த்து தயார் நிலையில் வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் பெரும்பாலான இடங்களில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு தூங்குவதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஒரு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரமாக ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு ஆகிய 4 பேருராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மொத்தமாக ஆண் வாக்காளர்கள் 70908பேரும், பெண் வாக்காளர்கள் 76589 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் என ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 499 வாக்காளர்கள் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 184 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு தூங்குவதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.
நாகை மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகள் கருதப்படும் 59 வாக்கு சாவடி மையங்களில் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு தேர்தல் வாக்கு காலை 7 மணிக்கு தொடங்கியது. இவை மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு 36 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அமைதியான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது
சில வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணி முதலே ஆர்வமாக வாக்காளர்கள் வாக்களித்தனர் வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது . குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .
மேலும் வாக்குசாவடி வரும் வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கிருமிநாசினி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு கையுறை வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீர்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.