உள்ளூர் செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது
வேதாரண்யம்:
வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம். இது போல் பல்வேறு சிறப்புகளை உடைய இந்த திருக்கோயில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு 29.1.22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
திருவிழாவின் ஒரு பகுதியாக மாசி மகத்தையொட்டி சந்திரசேகர சுவாமி பெரிய வெள்ளிரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து சன்னதி கடல் என்னும் வேதநதி கடற்கரை சென்றடைந்து அங்கு அஸ்த்ர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடி வழிபட்டனர். பின்பு சுவாமி நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தினர், பஞ்சாயத்தார்கள் கூடி சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஆறுகாட்டுத்துறை கிராம
பஞ்சாயத்தார் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.