உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசாரி பலி
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசாரி பலியானார்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சி, அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 48). ஆசாரி வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
நெய்விளக்கு நால்ரோடு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் இறந்தார்.
இது குறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்- இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.