உள்ளூர் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநாவலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகள் கவுசல்யா ( வயது 24). இவர் ஏரியூரில் உள்ள கலைக் கல்லூரியில் பி.எ.ஸ்.சி கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் அதே ஊரில் உள்ள முனியப்பன் பரிஸ் என்பவர் வீட்டுக்குச் சென்று அவருடைய பேரன் ரோஷன் (4) என்பவருடன் பேசிவிட்டு அவர் நடந்து சென்றார். அப்போது கவுசல்யா அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு சென்றனர். அப்போது மாணவி கிணற்றில் தத்தளித்தார். சிறிது நேரத்தில் அவர் மூச்சுதிணறி இறந்தார். இதுபற்றி அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று கவுசல்யாவின் உடலை மீட்டனர்.