உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

அவினாசி கல்லூரி பேராசிரியர் எழுதிய நாவலுக்கு விருது

Published On 2022-02-17 06:00 GMT   |   Update On 2022-02-17 06:00 GMT
கொரோனா ஊரடங்கின் போது நேரில் சந்திக்காமல் இணைய வழியாகவே இந்த நாவலை உருவாக்கி உள்ளனர்.
அவிநாசி:

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன். ஆவணம் மற்றும் குறும்படம்  இயக்கி வருகிறார். கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுகதை, நாவல், திறனாய்வு என 12 நூல்களை எழுதியுள்ளார். 

இவர் எழுதிய ‘பெய்த நூல்’ என்ற கவிதை தொகுப்பு, கேரள அரசின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 

இவரும் பாலக்காட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் அஞ்சு ஸஜித் ஆகியோர் இணைந்து எழுதிய ‘வெண் தரிசு நிலம்‘ என்ற நாவலுக்கு 2022-ம் ஆண்டிற்கான ‘இண்டியா புக் ஆப் ரெக்கார்ட்’ விருது கிடைத்துள்ளது. இது இரு வேறு மொழிகளை சேர்ந்த இரு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட முதல் நாவல். இந்நூல் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவந்துள்ளது.

மணிவண்ணன் கூறுகையில், 

“கொரோனா ஊரடங்கின் போது நேரில் சந்திக்காமல் இணைய வழியாகவே இந்த நாவலை உருவாக்கினோம். வறுமையில் உழன்று, உறவினை பிரிந்து  எல்லைகளை கடந்து தனிமை துயரங்களில் புலம்பெயர்ந்து வாழும் குடியானவர்களின் பிரச்சினை, வேளாண் மரபு சார்ந்து, முதல் தலைமுறை பட்டதாரிகள் எதிர்கொள்ளும் போராட்டங்களை இந்நாவல் விவரிக்கிறது என்றார்.
Tags:    

Similar News