உள்ளூர் செய்திகள்
அதிமுக

அ.தி.மு.க. நிர்வாகிகள் மேலும் 18 பேர் நீக்கம்- தலைமைக் கழகம் அறிவிப்பு

Published On 2022-02-16 07:55 GMT   |   Update On 2022-02-16 07:55 GMT
கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மேலும் 18 பேரை நீக்கம் செய்து தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கொள்கைகுறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுகின்ற காரணத்தாலும் 18 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 13-வது வார்டு செயலாளர், ஆர்.சி.சேகர் தாம்ரம் மாநகராட்சி எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர், ஜான் எட்வர்ட், மறைமலைநகர் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் கே.ஆர்.விஜயகுமார், 8-வது வார்டு தயாளன், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் எம்.கே.நாகூர்கனி, மறைமலைநகர் இணை செயலாளர் ஜி.சரளா, மறைமலைநகர் வர்த்தக அணிச் செயலாளர் வி.சரவணன், கடப்பேரி என்.பிரகாஷ்குமார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 13-வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி, கிருஷ்ணசாமி, 57-வது வட்ட அவை தலைவர் கேபிள் அருள்முருகன், 54-வது வட்டம் பழனியம்மாள் சந்திரன், 43-வது வட்டம் ஜொகரா முத்து நாகரத்தினம், 55-வது வட்டம் செந்தில் குமாரி, 50-வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி, புஷ்பலதா, 23-வது வட்டம் சவுமியா தேவி, 13-வது வட்ட செயலாளர் பி.தர்மலிங்கம், 54-வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி பி.நாகரத்தினம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முசிறி நகர 12-வது வார்டு மேலமைப்பு பிரதிநிதி ஜி.சந்திரன்.

இவர்கள் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவர்களுடன் அ.தி.மு.க.வினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
Tags:    

Similar News