உள்ளூர் செய்திகள்
காரில் கொண்டு வந்த ரூ.1.50 லட்சம் பறிமுதல்
ராஜபாளையத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரு.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் ராஜபாளையம் புதிய பஸ்நிலையம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையத்தை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் வந்த சீனிவாசன் என்பவரிடம் ரூ.1.50 லட்சம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் கொண்டு வந்து ஆணையாளர் சுந்தரம்பாளிடம் ஒப்படைத்தனர்.