உள்ளூர் செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
விவசாயிகளுக்கு பெரம்பலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அகரம் சீகூர் கிராமத்தில் சம்பா பருவத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.
சன்ன ரக நெல்லிற்க்கு கிலோ 20 ரூபாய் 60 பைசாவாகவும் மோட்டா ரக நெல்லிற்கு 20 ரூபாய் 15 பைசாவாகவும் விலை நிர்ணயம் செய்துள்ளனர்.
இதன்படி விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து பயன் பெறலாம் என நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர் சாந்தமூர்த்தி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.