உள்ளூர் செய்திகள்
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தா.பேட்டை பகுதியில் பிரதேஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருச்சி:
தா.பேட்டையில் காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது.
அதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாரா தனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதே போன்று தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர ஸ்தலமான கைலாசநாதர் கோவில், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடை பெற்றது.