உள்ளூர் செய்திகள்
போடி நகராட்சியில் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்ற போது

மின்னணு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

Published On 2022-02-15 14:37 IST   |   Update On 2022-02-15 14:37:00 IST
போடியில் மின்னணு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது
போடி:

போடி நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னி லையில்  நடைபெற்றது.

நகராட்சி தேர்தல் அலுவலர் சகிலா தலைமையில் 33 வார்டு களுக்கான ஓட்டுப்பதிவு எந்தி ரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது. உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் 157 வேட்பாளர்கள் முன்னிலையில் இப்பணி நடந்தது.

சின்னங்கள் பொருத்திய பின்பு வாக்குப்பதிவு எந்திரங்களை நகராட்சியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து, அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஓட்டுப் பதிவிற்கு முதல் நாளில் வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு அங்குள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சகிலா தெரிவித்தார்.

Similar News