உள்ளூர் செய்திகள்
காளிமுத்து

வங்கி மேலாளர் விபத்தில் பலி

Published On 2022-02-15 14:29 IST   |   Update On 2022-02-15 14:29:00 IST
ஒட்டன்சத்திரத்தில் தனியார் வங்கி மேலாளர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கள்ளிமந்தையம் பூசாரி கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் காளிமுத்து (வயது 30). இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

ஒட்டன்சத்திரத்தில் நடந்த உறவினர் திருமண விசேத்திற்காக காளிமுத்து தங்கள் நண்பர் ரகுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் விருப்பாச்சி அருகே இவர்கள் வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று காளிமுத்து உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணத்திற்கு சென்று திரும்பிய தனியார் வங்கி மேலாளர் பலியானது அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News