உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு - 19ந்தேதி பொது விடுமுறை

Published On 2022-02-15 10:43 IST   |   Update On 2022-02-15 10:43:00 IST
திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் தொழிலாளர் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.
திருப்பூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந்தேதி நடக்கிறது. 

அனைவரும் ஓட்டுப்போட ஏதுவாக ஓட்டுப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் தொழிலாளர் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். ஓட்டுப்பதிவு நாளான வருகிற19-ந்தேதி பின்னலாடை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

வாரச்சம்பள நாளில் ஓட்டுப்பதிவு நடப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள்  இந்த வாரம் வருகிற 18-ந் தேதியே சம்பளம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டு உள்ளன. 

Similar News