உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
தியாகதுருகம் பேரூராட்சியில் 19 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரத்து 406 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் வருகிற 19ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 13 வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 14 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தி.மு.க வேட்பாளர்கள் 14 பேர், அ.தி.மு.க வேட்பாளர்கள் 14 பேர், பா.ஜ.க வேட்பாளர்கள் 3 பேர், தே.மு.தி.க வேட்பாளர்கள் 4 பேர், பா.ம.க 1, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 7 பேர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் ஆக மொத்தம் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தியாகதுருகம் பேரூராட்சியில் 19 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரத்து 406 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 19 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கூடுதலாக 4 எந்திரங்கள் என மொத்தம் 23 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தலைமையில் மண்டல தேர்தல் அலுவலர்கள் அன்பழகன், சிவக்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வராஜ், பிரபு ஆகியோர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. தொடர்ந்து வேட்பாளர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.