உள்ளூர் செய்திகள்
கைது

கள்ளக்குறிச்சியில் சாராய வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Published On 2022-02-14 16:06 IST   |   Update On 2022-02-14 16:06:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் சின்னதுரையை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சின்னதுரை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சே‌ஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை.

இவர் கடந்த 17.01.2022-ந்தேதி மலைக்கோட்டாலம் குடிகாடிநீலமங்கலம் ஓடை அருகே 149 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். மேலும் இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, சங்கராபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவர் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் சின்னதுரையை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சின்னதுரை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News