உள்ளூர் செய்திகள்
வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட காட்சி.

நெல்லையில் நர்சரி பள்ளிகளை தயார் செய்யும் பணி தீவிரம்

Published On 2022-02-14 15:19 IST   |   Update On 2022-02-14 15:19:00 IST
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் நர்சரி பள்ளிகளை தயார்படுத்தும் பணி தீவிரமடைந்து உள்ளது.
நெல்லை:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததையடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் முதல், நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திலும் நாளை மறுநாள் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அந்த பள்ளிகளை தயார்படுத்தும் பணியில் பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாநகரில் உள்ள நர்சரி பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வண்ணாரப்பேட்டை மாநகராட்சி தொடக்க பள்ளியில் உள்ள மழலையர் பள்ளியில் இன்று காலை தச்சை மண்டல சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

 இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

Similar News