உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வருவோருக்கு 7 நாள் தனிமை கட்டாயமில்லை

Published On 2022-02-14 12:26 IST   |   Update On 2022-02-14 12:26:00 IST
வெளிநாடுகளில் இருந்து வருவோர் 72 மணிநேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்திருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.
திருப்பூர்:

தொழில், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பலரும் சென்று திரும்புகின்றனர். இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு தனிமை கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து திருப்பூர் திரும்புவோர் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

சுகாதாரத்துறை வழங்கிய  புதிய வழிகாட்டுதல் விபரம் வருமாறு: 

இனி 7 நாட்கள் தனிமை கட்டாயமில்லை. தனிமை முடிந்த பின் தொற்று பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை. நம் நாட்டுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளில் இரண்டு சதவீதம் பேரின் மாதிரி மட்டுமே சோதனைக்கு எடுக்கப்படுகிறது. அவர்களும் மாதிரிகளை தந்து விட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம். அங்கு தங்க வேண்டியதில்லை.

அதேநேரம் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு மாறாக பயணிகள் தங்கள் உடல் நலத்தை 14 நாட்கள் சுயமாக கண்காணித்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன் வெளிநாடுகளில் இருந்து வருவோர் 72 மணிநேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்திருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது. 

தற்போது விதிமுறை தளர்த்தப்பட்டு, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழ் பதிவேற்றியிருந்தால் போதும் என மாற்றப்பட்டுள்ளது. ஒமைக்ரான் இடர்பாடு உள்ள நாடுகள் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. நம் நாட்டுடன் பரஸ்பரம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள கனடா, ஹாங்காங், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்த விதிமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

Similar News