உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரியில் தனியார் பால் நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2022-02-12 15:34 IST   |   Update On 2022-02-12 15:34:00 IST
கிருஷ்ணகிரியில் தனியார் பால் நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு தனியார் பால் நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கொலசனஅள்ளி கிராமத்தில் தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் தற்காலிகமாகவும், நிரந்தமாகவும் ஆயிரணக் கான தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இதில் பெரும்பாலானோர் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, வெள்ளிச்சந்தை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தர்மபுரி டிஸ்ட்ரிக் மில்க் யூனியன் என்ற சங்கத்தைத் தொடங்கிக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சங்கம் ஆரம்பித்த பொறுப்பா ளர்கள் சிலரை திடீரென மகாராஷ்டிரா, மும்பை, தெலுங்கானா மாநிலத்திற்குப் பணி மாறுதல் செய்து அந்நிறுவனம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 150 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் இந்திய தொழிற்சங்க மையம், நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள தொழிலாளர் துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பணி மாறுதல் செய்த ஊழியர்களுக்கு மீண்டும் தர்மபுரியில் பணி வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் மீது பொய் புகார் கூறி வேலை நீக்கம் செய்யும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்கள் எழுப்பினர்.

Similar News