உள்ளூர் செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

கள்ளக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

Published On 2022-02-11 16:15 IST   |   Update On 2022-02-11 16:15:00 IST
கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் 46 மையங்களில் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி:

தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் 46 மையங்களில் நடக்கிறது. இதில் மொத்தம் 46,890 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கும் பணிக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்க்கு தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் தலைமை தாங்கினார். தேர்தல் தகவல் அலுவலர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உமாசங்கர் வரவேற்றார்.

கூட்டத்தில் 46 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப் பட்டது. நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து ஓட்டுச்சாவடி மைய அலுவலர்கள் 21 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கினர்.

Similar News