உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணா பாளையம் கல்லறை தோட்டம் பகுதியில் போராட்டம் செய்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி காட்ச

சூளகிரியில் தொடரும் பிரச்சினை: இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு-போராட்டம்

Published On 2022-02-11 15:52 IST   |   Update On 2022-02-11 15:52:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட கீழ்தெரு, காமநாயக்கன பேட்டை பகுதியில் 200 மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் யாராவது இறந்தால் அந்த கிராமத்தின் இருந்து எதிரே சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணா பாளையம் கிராமத்தில் அமைந்த நத்தம் கல்லறை தோட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பிணத்தை புதைத்து வந்தனர்.

இதை கிருஷ்ணா பாளையம் மக்கள் வீடுகள், தோட்டம் அருகே கல்லறைதோட்டம் இருப்பதால் பிணத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் சமீபகாலமாக காவல் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு முன்னிலையில் பிணத்தை புதைத்து வந்தனர்.

நேற்று முன்தினம் கீழ் தெருவை சேர்ந்த ஒருவர் இறந்தார். இதனால அவரை உடலை புதைக்க எதிர்ப்பு போலீசார்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று கீழ் தெருவை சேர்ந்த திம்மராஜ் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரை அடக்கம் செய்ய உறவினர் ஏற்பாடு செய்து வந்தனர். பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் தாசில்தார் நீலமேகனிடமும், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரனிடமும் பாதுகாப்பு அனுமதி வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். 

பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் பாதுகாப்புடன் நேற்று மாலை 3 மணி அளவில் கிருஷ்ணா பாளையம் கல்லறைதோட்டத்தில் இறந்த திம்மராஜ் உடலை புதைத்து விட்டு வெளியே வந்த போது 100 மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், தாசில்தார் நீலமேகன் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News