உள்ளூர் செய்திகள்
சாமல்பட்டி அருகே எலி பேஸ்ட் தின்ற விவசாயி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே எலிபேஸ்ட் தின்று விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள நகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது60). விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியுடன் காணப்பட்ட பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தின்று உயிறுக்கு போராடி இருந்துள்ளார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் நேற்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.